இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் தஞ்சை ரயில் முன்பு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்பு விவசாயிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட கூடிய நிலை ஏற்படும்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போராடி வெற்றி பெற்ற பிடி கத்தரிக்காய் உள்ளிட்ட அனைத்து விதைகளும் தடை செய்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் அனைத்தையும் விவசாயத்தை புகுத்தி, மண் மலடாகி விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலமாக மாறும். நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்" என சூளுரைத்தனர்.
இதையும் படிங்க: தம்பதி உயிரை பறித்த மின்சார வாட்டர் ஹீட்டர்!