ETV Bharat / state

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் மீன்பிடித் தொழில் முடக்கம் - The life of the Thanjavur students in questionஞ

தஞ்சாவூர்: தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதனால், மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Fishermen
Fishermen
author img

By

Published : Jan 27, 2020, 12:15 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரை பககுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. நாட்டுப் படகின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக தஞ்சை கடற்கரையையொட்டிய பகுதிகளில் காரைக்கால், பாண்டிச்சேரி பகுதி மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரேஸ் மடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனால், கடலில் மீன்வளம் குறைந்து போவதோடு நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் விரித்து வைத்திருக்கும் வலைகளையும் இந்த விசைப்படகுகள் அறுத்து செல்கின்றன.

அதனோடு வலைகளை இழந்து தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள், சாதாரணமாக ஒரு வலையின் விலை 50 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதால் புதிதாக வலை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வலைகள் இல்லாததால் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினர் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணீர் வடிக்கும் தஞ்சை மீனவர்கள்

அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வாழ்வாதாரத்தை இழந்து வாடும் அனைத்து மீனவர்களும் ஒன்றுதிரண்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'சவால் வேண்டாம்... களத்தில் இறங்குங்கள்' - கொங்கு ஈஸ்வரனுக்கு விவசாயிகள் கோரிக்கை

Intro:தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் மீன்பிடித் தொழில் முடக்கம்

Body:தஞ்சை மாவட்ட கடற்கரைப் பகுதியான தம்பிக்கோட்டை ,அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்கள் வாழ்வாதாரத்தை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலங்களாக வே தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதிகளில் காரைக்கால், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விசைப்படகுகள் இங்கு வந்து அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி ,ரேஸ் மடி ,சுருக்குமடி உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கடலில் மீன்வளம் குறைந்து போவதோடு நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் விரித்துவைத்திருந்த வலைகளையும் இந்த விசைப்படகுகள் அறுத்து சென்றுவிடுகின்றன. இதனால் வலைகளை இழந்து நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. சாதாரணமாக ஒரு வலையின் விலை 50 ஆயிரம் ரூபாய் வரை உள்ளதால் புதிதாக வலை வாங்க முடியாமல் சிலர் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் போய் விடுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை போலீசார்கள் ஆகியோர் இடத்தில் கோரிக்கை வைத்தும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை . இதனால் பலர் வேலை வாய்ப்பை இழந்து ஒரு சிலர் மாற்று தொழில் தேடி செல்ல வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வேறு வழி இல்லாமல் கடன் வாங்கி மீண்டும் வலைகளை வாங்கி கடலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் அந்த வலைகளை காப்பாற்றிக்கொள்ள மற்றும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். தவறும் பட்சத்தில் அனைத்து மீனவர்களும் ஒன்றுதிரண்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.