கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி திருக்கோயிலில் வருடந்தோறும், ஐப்பசி 30ஆம் நாள் துலாம் கடைமுழுக்கு தீர்த்தவாரி, நேற்று நடைபெற்றது.
இந்த தீர்த்தவாரியில் சுதர்சன வள்ளி சமேத சக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வந்து சக்கரைப்படித்துறையில் கடைமுழுக்கு தீர்த்தவாரியில் பங்கேற்றார்.
இதில் பால சக்கரபாணிக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதையும் படிக்க: எழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்!