கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, பல்வேறு மாவட்ட நிர்வாகத்தினர், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கள்ளப்புலியூர் ஊராட்சியில் கடந்த வாரம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஒரு குடும்பத்திற்கு இரண்டு ஆயிரம் மதிப்புள்ள அரிசி, மளிகை மற்றும் காய்கறிகளை இலவசமாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு மே மாதம் மூன்றாம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளதையொட்டி மணஞ்சேரி, கள்ளப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 9 ஆயிரம் குடும்பங்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், தனது சொந்த நிதியிலிருந்து தினமும் இரண்டு ஆயிரம் நபர்களுக்கு வீடு வீடாகச் சென்று, மதிய உணவு வழங்கி வருகிறார். இவரின் இச்சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழங்குடி மக்கள் இயக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி