தஞ்சாவூர் அருகே மருங்குளம் நான்கு ரோடு சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து அத்தியாவசிய பொருள்கள் வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில், அந்தப் பகுதியை சேர்ந்த கிராமத்தில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சுகாதார அலுவலர்கள் அப்பகுதியை மூடி சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த கடைகளும் மூடப்பட்டன. இதற்கிடையில் மருங்குளத்திலுள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று மருங்குளம் டாஸ்மாக் கடையை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மூட உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை, 12 பேர் மீது குற்றப்பத்திரிகை