தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் இன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மாவட்டத்தில் கஞ்சா பயன்பாடு இருக்கக் கூடாது என்ற வகையில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 132 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அதுதொடர்பாக 132 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி சம்பந்தமாக 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 197 நபர்கள் கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா தொடர்பாக 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 642 நபர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் ரவுடிகள் அச்சுறுத்தல் இல்லாதவாறும், பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் இருப்பதற்காகவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 76 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 18 வயதிற்குட்பட்ட திருமணம் நடத்த அனுமதிக்கும் மண்டப உரிமையாளருக்கு சிறை!