தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு டவுன்லோட் காவல்காரதெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் குமார். இவர் ஒரத்தநாடு வர்த்தகர்கள் சங்கத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் குமார் ஒரத்தநாடு கடை வீதியில் வீட்டிற்கான பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரத்தநாடு துணை ஆய்வாளர் விஜய கிருஷ்ணன் வழி மறித்து, திட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கருத்தில் ஆத்திரமடைந்த விஜய கிருஷ்ணன், குமாரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வர்த்தக சங்கம் சார்பில் புகார் அளிக்கவில்லை.
ஆனால், குமாரைக் காயப்படுத்திய துணை ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒரத்தநாடு வர்த்தக சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் வர்த்தக சங்கத்தைக் கூட்டி, முழு கடையடைப்பு நடத்த வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் முடிவு எடுத்தனர்.
இதையடுத்து, ஒரத்தநாடு துணை ஆய்வாளர் விஜய கிருஷ்ணன் உடனடியாக திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் வூஹான் ஆன கோயம்பேடு; தவறு எங்கே நடந்தது?