தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கினர்.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், சேதுபாவாசத்திரம், திருவையாறு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கொடுக்கப்பட்டது.
அmதன் தொடர்ச்சியாக கும்பகோணம் அருகேயுள்ள கள்ளப்புலியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம், கரும்பு அரிசி முந்திரி திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
இதையும் படிங்க: