தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிவரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை ஒன்பதாயிரத்து 205 பேர் கரோனா தொற்று பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்றனர்.
அதில் இன்று (செப். 19) ஒரேநாளில் மட்டும் 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருபவர் 1,073 நபர்களாகவும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆகவும் உள்ளது. இன்று (செப். 19) ஒரேநாளில் 151 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.