தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று (செப்.2) ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 886ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (செப்.2) ஒரே நாளில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.