தமிழ்நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் தஞ்சையில் 113 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தற்போது 926 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 75 பேர் உயிரிழந்துள்ளனர்.