தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மீனவர் சங்க பொதுச்செயலாளர் தாஜுதீன் கூறுகையில், "நாகை, காரைக்கால் பகுதிகளிலுள்ள விசைப்படகு மீனவர்களால் தஞ்சை மாவட்ட கடல் எல்லைப் பகுதியில் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் முடங்கியுள்ளதுடன் மட்டுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதால் அரசு இதனை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஜா புயலால் அனைத்து விசைப்படகுகளும் கடுமையாகச் சேதமடைந்த நிலையில், அரசு ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது. இது எந்த வகையிலும் போதாது. இந்தாண்டின் நிதிநிலை அறிக்கையிலாவது உரிய நிதியை வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து யோசிக்கலாம்' - ராமதாஸ்