டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார். அதனடிப்படியில் இன்று, குந்தவை நாச்சியார் கல்லூரியிலுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டடம், வளாகத்திற்குள் டெங்கு கொசு புழுக்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அங்குச் சென்ற அவர் விடுதியின் சமையற் கூடம், உணவுக் கூடம், மொட்டை மாடி, கழிவறை, நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை ஆய்வுசெய்தார். இதனைத்தொடர்ந்து அவர் இவை அனைத்தையும் சுகாதாரமாக நீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுமாறு சம்பத்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அவர் விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவியர்களிடம் விடுதியை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளங்கோ, சுகாதார பணிகள் துணை இயக்குநர் ரவீந்திரன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி