ETV Bharat / state

சோதனை செய்த அலுவலர்களை சிறையிட்ட ஊழியர்கள்!

தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதித்துள்ள நிலையில், சோதனைக்கு சென்ற அதிகாரிகளை கடையில் வைத்து ஊழியர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்
author img

By

Published : Jun 19, 2019, 10:19 AM IST

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் டவுன்பகுதியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தஞ்சை நகர் நல அலுவலர் நமச்சிவாயம், தலைமையில் 10 பேர் கொண்ட குழு தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான கடையில் நான்கு துப்புரவு ஆய்வாளர்கள், பெண் மேற்பார்வையாளர்கள் உட்பட 6 பேர் கடைக்குள் சென்று பிளாஸ்டிக் பொருள் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையிலிருந்த இரண்டு ஊழியர்கள், திடீரென வெளியே வந்து அலுவலர்களை உள்ளே வைத்து கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். அதேபோல் கடைக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்துவிட்டு ஓடினர். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடைக்குள் வைத்து அலுவலர்களை பூட்டியதால் பரபரப்பு

பின்னர் கடைக்குள் சிக்கிக்கொண்ட அலுவலர்களை, வெளியிலிருந்தவர்கள் காப்பாற்றினர். இதனையடுத்து கடையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து அலுவலர்கள் பேசுகையில், தஞ்சை நகர் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்தாலோ உடனடியாக அபராதம் விதிக்கப்படும். தற்போது கடைக்குள் அலுவலர்களை வைத்து பூட்டிய சம்பவத்தில் கடையின் உரிமையாளர், ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மேலும் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவிதனர்.

தஞ்சாவூர் ஜுன் 18

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ள நிலையில் சோதனைக்கு சென்ற அதிகாரிகளை கடையில் வைத்து பூட்டியதால் பரபரப்பு. கடைசிக்கு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவுப் படி மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்  தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர். 
அப்போது மார்க்கெட் ரோடு பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான கடையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 4 துப்புரவு ஆய்வாளர்கள், ஒரு பெண் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் என மொத்தம் 6 பேர் கடைக்குள் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் உள்ளதா என்று சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது கடைக்குள் இருந்த 2 ஊழியர்கள் திடீரென வெளியே ஓடி வந்து கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். மேலும் கடைக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்து விட்டு ஓட்டம் பிடித்தனர்.
சோதனைக்கு வந்த அதிகாரிகளை கடைக்குள் வைத்து ஷட்டரை இழுத்து மூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைக்குள் மாட்டி கொண்ட பெண் உள்பட 6 அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினர்.
அப்போது வெளியே நின்றிருந்த நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே கடையின் ஷட்டரை இழுத்து மேலே தூக்கினர். பின்னர் கடைக்குள் இருந்த 6 பேரையும் மீட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கடையின் உரிமையாளர் சங்கர் மற்றும் கடை ஊழியர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
இதற்கிடையே கடைக்குள் இருந்த பிளாஸ்டிக் பைகள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, தஞ்சை நகர் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்தாலோ உடனடியாக அபராதம் விதிக்கப்படும். தற்போது கடைக்குள் அதிகாரிகளை வைத்து பூட்டிய சம்பவத்தில் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையை சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.