ETV Bharat / state

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வுசெய்தார்

collector inspection
author img

By

Published : Jul 25, 2019, 1:14 PM IST

தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

இதில், திருவிடைமருதூர் ஒன்றியம் ஆடுதுறை பேரூராட்சியில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் ஆழ்துளை கிணறுகள், திருப்பனந்தாள் ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சியில் மணல்மேட்டு தெருவில் ரூ.26.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சிறுபாலம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பசுபதீஸ்வரர் கோயில் அகழி தூர்வாரப்படுவது என அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

thanjavur collector inspection
ஆட்சியர் ஆய்வு
பின்னர் கோனுலாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆடுதுறை அரசு மருத்துவமனையை பார்வையிட்ட அவர் மருந்துகளின் இருப்பு, மருத்துவ உபகரணங்கள் ஏதேனும் தேவைப்படுகிறதா? என்பதையும் மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.
ஆட்சியர் ஆய்வு  திருப்பனந்தாள்  திருவிடை மருதூர்  தஞ்சாவூர்  collector inspection  thanjavur  Thirupananthal  Thiruvidaimaruthur
மருத்துவமனையில் ஆய்வு

மேலும் அந்த ஒன்றியங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளி, நியாய விலைக்கடை, பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி என சில இடங்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது திருவிடைமருதூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் அசோக் குமார், வட்டார வளர்ச்சி அலுவர்கள் ராஜ்முருகன், வட்டாட்சியர் சிவக்குமார், தலைமை மருத்துவர் சுவாதிகா, நிலைய மருத்துவர்கள் சரவணன், மங்கையற்கரசி, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

thanjavur collector inspection
நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்யும ஆட்சியர்

Intro:தஞ்சாவூர் ஜுலை 24

திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வுBody:

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்; ஒன்றியம் ஆடுதுறை அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாம்புக்கடி, நாய்க்கடி ஆகியவற்றிற்கான விஷ முறிவு மருந்துகள் கையிருப்பு குறித்தும், ஏனைய மருந்துகளின் இருப்பு குறித்தும், பிரசவ அறையில் தேவையான உபகரணங்கள் உள்ளதா என மருத்;துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். சித்த மருந்துபிரிவு, யானைகால், மலேரியா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மருத்துவக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலை கடையில் கையிருப்பு மற்றும் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து மூட்டையில் எடை சரியாகவுள்ளதா என பரிசோதித்தார். தொடர்ந்து, பிற்படுத்தபட்டடோர் நல மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து விடுதியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திடவும், மரக்கன்றுகளை நட்டு சுற்றுபுறத்தை மாணவர்கள் மூலம் பராமரித்திடவும் அறிவுறுத்தினார். ஆடுதுறை பேரூராட்சியில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் மூன்று இடங்களில் ரூ 10 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், திருப்பனந்தாள் ஒன்றியம் திருகோடி காவல் திருகுளம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுவதை பார்வையிட்டு குளத்தின் கரையை பலப்படுத்தி நான்கு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, திருப்பனந்தாள் ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சியில் மணல்மேட்டு தெருவில் சிறுபாலம் ரூ.26.62 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்து 10ஆம் வகுப்பு மாணவர்களிடம் கணித பாடம் குறித்து கேள்விகளை கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர், பந்தநல்லூர் பசுபதிஸ்வரர் கோவில் அகழி சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் தூர்வாரப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அகழியை முறையாக அளந்து தூர்வாரிடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். பந்தநல்லூர் ஊராட்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து மழைநீர் வடிகால் அமைப்புகளை அதில் இணைத்திட அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, கோனுலாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு பிரசவித்த தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்தும், குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மருந்து கையிருப்பு, வெளி நோயாளிகளின் வருகை பதிவேடு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது திருவிடைமருதூர்; முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் .அசோக் குமார், வட்டார வளர்ச்சி அலுவர்கள் ராஜ்முருகன், வட்டாட்சியர் .சிவக்குமார், தலைமை மருத்துவர் சுவாதிகா, நிலைய மருத்துவர்கள் .சரவணன், மங்கையற்கரசி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.