ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - கோபுரம் ஏறிய 'தமிழ்'!

தஞ்சாவூர்: உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ், சமஸ்கிருதத்தில் வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

thanjavur
thanjavur
author img

By

Published : Feb 5, 2020, 2:27 PM IST

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றுவருகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தன. இன்று அதிகாலை 4:30 மணியளவில் குடமுழுக்கிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், குடமுழுக்கு நிகழ்ச்சி காலை 9:30 மணியளவில் நடைபெற்றது.

காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளிலிருந்து எடுத்துவரப்பட்டு சிறப்புப் பூஜைக்கு உட்படுத்தப்பட்ட புனித நீர் பெரிய கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டது. ராஜ கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், மூல கோபுரம் உள்ளிட்ட அனைத்துக் கோபுர கலசங்கள் மீதும் சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் திருமுறை பாட பூஜிக்கப்பட்ட புனித நீரானது கலசங்களில் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து தமிழ், சமஸ்கிருத மொழிகளில் வேதங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. மேலும், திருமுறை, திருவாசகம் ஆகியவற்றை ஓதுவார்கள் இசைத்தனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடக்கும் குடமுழுக்கு விழா என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாடுகளிலிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனையொட்டி, தஞ்சையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்

மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் ஆறாவது முறையாக குடமுழுக்கு நிகழ்வு நடைபெறுகிறது.

முதன் முறையாக கி.பி.1010ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடைபெற்றதை அடுத்து கி.பி.1729, 1843 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1980, 1997 ஆகிய ஆண்டுகளிலும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடைபெற்றிருப்பது சிறப்புக்குறியதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...

எழில்மிகு தோற்றத்துடன் பிரமாண்டமாய் தயாராகும் தஞ்சை பெரிய கோயில்!

Intro:தஞ்சாவூர் பிப் 05

தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேக விழா
தஞ்சை பெரிய கோவில் நடைபெற்றது.

visul through live

Body:உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஓராண்டுக்கு முன்பாக அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் குடமுழுக்கு விழா பிப்ரவரி ஐந்தாம் தேதி நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக திட்டமிடப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பக்தர்கள் எளிதில் வந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்து யாகசாலை பூஜை ஆனது பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கி ஐந்தாம் தேதி காலை வரை 8 கால யாக பூஜைகள் 22 சதுர அடி கொண்ட யாகசாலை கூடம் அமைத்து அதில் 110 உங்கள் உள்ளங்கள் விளக்கப்பட்டு தேவாரம் திருவாசகம் என்பது ஓதுவார்கள் பண்ணிரு தமிழ் திருமுறைகளைப் பாடி பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து 8 கால யாக பூஜைகள் நிறைவடைந்த பின்பு ஐந்தாம் தேதி காலை யாகசாலை குண்டத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு ராஜ கோபுரம் கேரளாந்தகன் கோபுரம் மூல கோபுரம் அனைத்து கோபுர கலசங்கள் உள்ளன சிவாச்சாரியர்கள் ஓதுவார்கள் திருமுறைகள் பாட பூஜிக்கப்பட்ட புனித நீரானது கலசத்தில் ஊற்றப்பட்டது இந்த கும்பாபிஷேகம் ஆனது இக்கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளில் இது ஆறாவது குடமுழுக்கு விழாவாகும் ராஜராஜ சோழனால் 1010 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் அடுத்து 1729 ஆம் ஆண்டு 1843 ஆம் ஆண்டு 1980ஆம் ஆண்டு 1997ஆம் ஆண்டு நடைபெற்ற பின் 23 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Conclusion:sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.