ETV Bharat / state

பெருந்தொற்று முன்னெச்சரிக்கை: பெரிய கோயிலில் தரிசனத்திற்குத் தடை

தஞ்சை: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் அச்சம் காரணமாக தரிசனம் செய்யவரும் பக்தர்களின் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கையாக பெரிய கோயிலில் தரிசனத்திற்கு தடை!
author img

By

Published : Mar 18, 2020, 2:37 PM IST

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 147 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவருகிறது.

தமிழ்நாட்டில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக, தஞ்சை பெருவுடையார் கோயிலில் தரிசனம்செய்ய அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இன்றிலிருந்து தரிசனத்திற்கு இடைக்காலத் தடையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்மையில், நடைபெற்று தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கை அடுத்து கோயிலில் தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்துவருகின்றனர்.

thanjavur big temple closed due to - Covid 19
கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கையாக பெரிய கோயிலில் தரிசனத்திற்குத் தடை

இது தொடர்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கூறுகையில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசின் உத்தரவிற்கு இணங்கி, பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்கவே மார்ச் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது.

இங்கு எந்தவிதமான தொற்றுப் பரவலும் ஏற்படாமல் தடுக்கவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். பொதுமக்கள் கரோனா பற்றி தேவையற்ற அச்சப்பட வேண்டாம். எனினும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தஞ்சை பெரிய கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடக்கும்” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க : கோவிட்-19 பெருந்தொற்று: மக்களைப் பாதுகாக்க இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.