ETV Bharat / state

கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி - தஞ்சாவூர்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பம்பு செட்டில் குளித்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
author img

By

Published : Apr 30, 2019, 11:32 PM IST

கும்பகோணத்தை அடுத்த மேலமருத்துவகுடி பகுதியில் தெலுங்கு தெருவைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சக்திவேல் (18).

இவர், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த விக்னேஷ், கணேஷ் பிரபு ஆகியோருடன் வெளியில் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

பின்னர், துரௌபதி அம்மன் கோயில் பின்புறம் அமைந்துள்ள பம்புசெட்டு அருகே, அரை நிர்வாணமாக கிடந்துள்ளார் கிடைத்துள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள், திருநீலக்குடி காவல் துறையினருக்குத் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சக்திவேலின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதில், சக்திவேல் மின்சாரம் தாக்கி இறந்ததாக கண்டறியப்பட்டது.

ஆனால், அதனை ஏற்க மறுத்த சக்திவேலின் தந்தை, வினேஷும், கணேஷும்தான் சக்திவேலைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.

தஞ்சாவூர் ஏப் 30 

மின்சாரம் தாக்கி    
கும்பகோணத்தில்   கூழி தொழிலாளி சாவு 

தஞ்சை மாவட்டம் 
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட மேலமருத்துவகுடியை தெலுங்கு தெருவைச் சேர்ந்த கணபதி மகன் சக்திவேல் (18) பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு எலக்ட்ரிஷனாக  மூன்று ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இன்று  அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்கணேஷ்பிரபு ஆகியோர் வேலை இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றனர்  இந்நிலையில் கொத்துக்கோவில் அருகே உள்ள துரோபதி அம்மன் திருக்கோவில் பின்புறமுள்ள பம்பு செட்டில் சக்திவேல் நிர்வாணமாக  மிதந்தார் அருகிலிருந்த கிராம மக்கள் திருநீலக்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சக்திவேலின் தந்தை எனது மகன் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை எனது மகனை விக்னேஷும் கணேஷ்பிரபு இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டார்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியும் அதுவரை நாங்கள் பிரேதத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார். சக்திவேல் சாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்று உறவினர்களும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.