தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரை அருகே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிதாக வரவிருக்கும் அரசு மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட துணைச் செயலாளர் ரவி ராஜ் தலைமையில், தாலுகா அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் மது பாட்டில்களை ஏந்திக்கொண்டு புதிதாத திறக்கப்படவுள்ள மதுக்கடை பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு இடையூறாக இருக்கும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பரமசிவன் வேடமணிந்து ஒருவர் பங்கற்றது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாங்கம் ஜோதிமலை, சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் 12 லட்சம் கையாடல் செய்தவர் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கைது!