தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருபா ராணி. இவர் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கச்சங்கிலியை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதேபோல் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ஆர்த்தி, வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மிரட்டி, நான்கு சவரன் தங்கச்சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் ஒரத்தநாடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நாதன் (25), வல்லம் பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் (23) என்று தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் விசாரணை செய்ததில் இருவரும் தொடர் தங்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காதலியைக் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட கபடி வீரர்