ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: மலேசியாவில் தவித்த முதியவர் தாய்நாடு திரும்பினார்!

தஞ்சாவூர்: போலி பாஸ்போர்ட் ஏஜெண்ட்டால் ஏமாற்றப்பட்டு மலேசியாவில் உணவின்றி தவித்த முதியவர் பத்திரமாக வீடு திரும்ப உதவிய மத்திய அரசிற்கும், ஈடிவி பாரத் செய்திகளுக்கும் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.

old man return tamil nadu from malaysia
வீடு திரும்பிய தஞ்சை முதியவர்
author img

By

Published : Dec 1, 2019, 5:00 PM IST

Updated : Dec 2, 2019, 8:25 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள சேண்டாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல். 72 வயதாகும் இவர், குடும்ப வறுமையின் காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவுக்குச் சென்று வேலை பார்த்து வரலாம் என்று நினைத்து, வட்டிக்கு கடன் வாங்கி அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு இவரை அழைத்துச் சென்ற ஏஜெண்ட், இவருக்கு முறையான வேலையைப் பெற்றுத் தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால், வேலையின்றி கஷ்டப்படுவதாகவும், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கிடைக்கும் உணவுகளை உண்டு நாட்களைக் கழித்துவருவதாகவும் குடும்பத்தாருக்கு சித்திரவேல் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தவித்த முதியவர்... தஞ்சையில் குடும்பத்தினருடன்

இதையடுத்து, சித்திரவேல் தனது மகன் பாஸ்கருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நான் பட்டினியில் அவதிப்படுகிறேன், எனக்கு உடல் நிலை சரியில்லை, மிகவும் பயமாக உள்ளது, என்னை ஊருக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரது மகன் பாஸ்கர் மலேசியாவில் உள்ள உறவினர்களிடம் தனது தந்தையின் நிலை குறித்து தெரிவித்து, அவரை ஊருக்கு அனுப்ப உதவுமாறு வேண்டியுள்ளார். ஆனால், ஏஜெண்ட்டால் ஏமாற்றப்பட்டதால் அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்றும், தங்களால் எந்த உதவியும் செய்ய இயலாது எனவும் உறவினர்கள் கைவிரித்துள்ளனர். இதனால், செய்வதறியாமல் திகைத்த பாஸ்கர், அவரது தாய் மாணிக்கம் ஆகியோர் மிகவும் கவலையடைந்தனர்.

இதையும் படிங்க: 'என்னை ஏமாற்றிவிட்டார்கள், நாடு திரும்ப உதவுங்கள்'- முதியவர் உருக்கம்

இந்நிலையில், மலேசியாவில் உள்ள ‘மலேசிய உலக மனிதம்’ என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி கமலநாதன் என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஈடிவி பாரத் செய்திகளுக்கு தகவல் கொடுத்ததோடு, சித்திரவேல் மலேசியாவிலிருந்து பேசிய உருக்கமான பேட்டியையும் அனுப்பி வைத்தார்.

முதியவர் சித்திரவேல், மகன் பாஸ்கர் பேட்டி

இதையடுத்து சித்திரவேல் பேட்டி, அவரது மகன் பாஸ்கர் பேட்டி ஆகியவை ஈடிவி பாரத் செய்திகளில் இரண்டு முறை வெளியானது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் சேண்டாகோட்டையிலுள்ள சித்திரவேல் வீட்டிற்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் இந்திய தூதரகத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பின்னர், மத்திய அரசின் உடனடி நடவடிக்கையால், கடுமையான உடல்நிலை பாதிப்போடு சித்திரவேல் பத்திரமாக நாடு திரும்பினார். அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

இதையடுத்து, சித்திரவேல் குடும்பத்தாரும், உறவினர்களும் அவர் நலமுடன் நாடு திரும்ப நடவடிக்கை எடுத்த கமலநாதன், வருவாய்த் துறை அலுவலர்கள், மத்திய அரசு அலுவலர்கள் மற்றும் ஈடிவி பாரத் செய்திகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மலேசியாவில் உணவின்றி தவிக்கும் தஞ்சை முதியவர் - மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் கோரிக்கை!

Intro:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி- மலேசியாவில் தவித்த தஞ்சை முதியவர் வீடு திரும்பினார்.

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள சேண்டாகோட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சித்திரவேல் .இவருக்கு வயது 72.இவரது மனைவி மாணிக்கம். மகன் பாஸ்கர். இந்த குடும்பம் சிறிய விவசாய குடும்பம். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு சென்று வேலை பார்த்து வரலாம் என்றுவட்டிக்கு கடன் வாங்கி மலேசியா நாட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு இவரை அழைத்துச் சென்ற ஏஜென்ட் இவருக்கு முறையான வேலைவாய்ப்பு பெற்று தராமல் ஏமாற்றி விட்டதாகவும் இதனால் வேலையின்றி கஷ்டப்படுவதாகவும் சித்திரவேல் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இருந்தும் கோயில்கள் மற்றும் பிற இடங்களில் அன்றாடம் ஒரு வேளையாவது சாப்பிட்டுக்கொண்டு இருந்தவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதை அடுத்து சித்திரவேல் தனது மகன் பாஸ்கருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் நான் பட்டினியில் அவதிப்படுகிறேன் மேலும் எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால் மிகவும் பயமாக உள்ளது. எனவே என்னை ஊருக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதை அடுத்து அவரது மகன் பாஸ்கர் அங்குள்ள உறவினர் ஒருவரிடத்தில் கூறி தனது தந்தையை பற்றி சொல்லி மேலும் அவரை ஊருக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டி உள்ளார். இருந்தும் ஏஜெண்டால் ஏமாற்றப் பட்டதால் அவருக்கு பாஸ்போர்ட் கூட இல்லாமல் இருந்தது கண்டு அவரது உறவினர் என்னால் எந்த உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாத சித்திரவேல் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அம்மா ஆகியோர் மிகவும் கவலை அடைந்தனர். இந்நிலையில் மலேசியாவில் உள்ள மலேசிய உலக மனிதம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி கமலநாதன் என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன் ஈடிவி பாரத்திற்கு தகவல் கொடுத்ததோடு சித்திரவேல் மலேசியாவிலிருந்து பேசிய உருக்கமான பேட்டியையும் ஈடிவி க்கு அனுப்பி வைத்தார். இதைஅடுத்து சித்திரவேல் பேட்டி மற்றும் அவரது மகன் பாஸ்கர் பேட்டி ஆகியவற்றுடன் செய்தி ஈடிவி பாரத்தில் இரண்டு முறை வெளியானது .இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சேண்டாகோட்டை யிலுள்ள சித்திரவேல் வீட்டுக்குச் சென்று அங்கு விசாரணை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் இடத்தில் அறிக்கை கொடுத்தனர். இதன் பேரில் மாவட்ட ஆட்சியர் இந்தியன் எம்பஸி யை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதை அடுத்து மத்திய அரசின் உடனடி நடவடிக்கையில் சித்திரவேல் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சித்திரவேல் மிகுந்த உடல்நிலை பாதிப்போடு ஊர் வந்து சேர்ந்தார் அங்கு அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். இதையடுத்து அவரும் அவரது குடும்பத்தாரும் அவரது உறவினர்களும் சித்திரவேல் நலமுடன் ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்த கமலநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஈடிவி பாரத் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Conclusion:
Last Updated : Dec 2, 2019, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.