தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான கடல் பகுதிகளில் இன்று காலை கடல் சீற்றம் ஏற்பட்டது.
மேலும் திடீரென 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. இதனால் மீன் பிடிக்கச் தயாரான நாட்டுப்படகு வைத்திருந்த மீனவர்கள் அதை கண்ட அதிர்ச்சியில் மீன்பிடிக்க செல்லாமல் திரும்பியுள்ளனர். மீண்டும் மாலை 5 மணி அளவில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றம் ஏற்பட்டது.