ETV Bharat / state

தைப்பூச திருவிழா: சுவாமிமலை கோயிலில் கோலாகல கொண்டாட்டம்

author img

By

Published : Feb 4, 2023, 12:22 PM IST

சுவாமிமலை கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை, வெள்ளி கவசமுடன் வைரவேல் அணிவிப்பு மிக விமர்சையாக நடைபெற்றது.

தைப்பூச திருவிழா
தைப்பூச திருவிழா
சுவாமிமலை கோயிலில் தைப்பூச திருவிழா

தஞ்சாவூர்: தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில். இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற காட்டுமலைக் கோயிலாகும். தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதது இத்தலம்.

எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும் சுவாமிக்கே நாதன் ஆனதால், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது இந்த சுவாமிமலை திருத்தலம்.

இந்திரனுக்கு சாபவிமோசனம் கிடைத்ததால் ஐராவத யானையினை இத்தலத்தில் காணிக்கையாக செலுத்திய பெருமை கொண்டதால் முருகப்பெருமானுக்கு முன்பு யானை வாகனம் மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அகத்தியர் பூஜை செய்து வழிபட்ட தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் காலையும், மாலையும் படி சட்டத்தில் சுவாமி பிரகார உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 10ம் நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வெள்ளி கவசமுடன், வைரவேல் சாற்றப்பட்டது. தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியசுவாமிக்கு கோபுர ஆர்த்தி பஞ்சார்த்தி செய்யப்பட்ட பிறகு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, பிரகார உலாவும் தொடர்ந்து வீதியுலா சென்று, நண்பகல் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும்.

அதிகாலை முதல் ஏராளமானோர் நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருப்பினும் கடந்த இரண்டு நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், பூசம் இன்றா நாளையா என்ற குழப்பத்திலும் வழக்கமான கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தைப்பூசத்தை முன்னிட்டு பூ விலை உயர்வு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.