தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழக தொலைதுார கல்வியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு மே 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் கல்வியியல் கல்லுாரி ஒன்றில் நடைபெற்ற தேர்தவிற்கு, கண்காணிப்பு அலுவலராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் உதவி பேராசிரியரான முத்தையன்(56) நியமிக்கப்பட்டிருந்தார்.
சுமார் 200 மாணவ, மாணவிகள் பங்குபெற்ற அந்த தேர்வில், ஒவ்வொரு மாணவரும் ஐந்தாயிரம் லஞ்சம் கொடுத்தால், தேர்வில் காப்பி அடித்து கொள்ளலாம் என முத்தையன் தொலைநிலை கல்வி நிர்வாகிகளிடமும், மாணவர்களிடமும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தொலைநிலை கல்வி நிர்வாகத்தினர், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனிடம் புகாரளித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க துணை வேந்தர் குழு ஒன்றை அமைத்தார்.
அக்குழுவினர் நடத்திய விசாரணையில் இவை அனைத்தும் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும், மேலும் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதாகவும் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து உதவிப் பேராசிரியர் முத்தையனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.