கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பார்களை மூடச் சொன்ன தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் கடைகளில் பணி புரியும் ஊழியர்கள் முகக் கவசம் கையுறை அணிந்து பாதுகாப்பாக வேலை செய்ய அறிவுறுத்தியது.
இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 176 மதுபான கடைகளில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட காசாளர், விற்பனையாளர் என அனைத்து ஊழியர்களுக்கும் முகக் கவசம், கையுறை வழங்கப்பட்டு பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 61 பார்கள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க... கரோனா எதிரொலி: பிரேசிலில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்!