தஞ்சாவூர்: கும்பகோணம் ஹாஜியார் தெருவில் உள்ள விஆர்எஸ் காம்ப்ளக்ஸ் எதிரே முகமது பஷீர் என்பவர் சிரின் மெடிக்கல் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவருக்கு தொடர்ந்து பார்சல் மூலமாக போதை மாத்திரைகளை சப்ளை செய்துள்ளார். இதனால் அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
இதனை கண்டறிந்து அவரை கோயம்புத்தூர் காவல்துறையினர் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மருந்தக உரிமையாளர் சட்டவிரோதமாக பார்சல் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது பஷீர் நேற்று (ஜூலை 17) நடைபெற்ற பள்ளி தீ விபத்தின் 18 ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில் அதிமுக நிர்வாகிகளுடன் சம்பவம் நடந்த பள்ளி முன்பு மரியாதை செலுத்த வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு