ETV Bharat / state

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்ற காற்றுடன் போராடிய சிறப்பு விருந்தினர்! - vice chancellor narayansamy

தஞ்சை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நீண்ட நேரம் குத்துவிளக்கு ஏற்ற போராடிய விழாக் குழுவினர். காற்று பலமாக அடித்ததால் சிறப்பு விருந்தினர் விளக்கு ஏற்றாமல் விழாவை தொடங்கினார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விளக்கேற்ற காற்றுடன் போராடிய சிறப்பு விருந்தினர்

author img

By

Published : Jun 11, 2023, 5:32 PM IST

தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரியில் 2017ம் ஆண்டு படித்த முடித்த மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மருத்துவக் கல்லூரியின் திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 148 மருத்துவ மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மருத்துவ இளங்கலை மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.

விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி பேசும் போது, பட்டமளிப்பு என்பது பட்டம் பெரும் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான விழாவாகும். மேலும் மருத்துவக் கல்லூரியில் நுழைந்த நாள் முதல் படிப்பை முடித்து வெளியே செல்லும் வரையிலும் மருத்துவம் குறித்த அறிவு நிறையப் பெற்று இருப்பீர்கள். 2017 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் படித்த மாணவர்கள் கரோனா வைரஸ் மூலம் பல்வேறு பாடங்களை கற்று இருப்பார்கள்.

கரோனா நோய்த் தொற்றை இந்தியா சிறப்பாகக் கையாண்டதாக உலக நாடுகள் பாராட்டியது. கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ படிப்புகள் வளர்ந்துள்ளது. இந்தியாவில் மருத்துவம் பல்வேறு நல்ல நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில், மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது என்ற தீவிரமாக ஆராய்ந்து அனுமதி அளிப்பது தான் இதற்குக் காரணம். மருத்துவத்துறையில் இந்தியாவுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் தான் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அளவில் மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. தமிழகத்தில் 834 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற விதத்தில் டாக்டர்கள் உள்ளனர். இந்திய அளவில் மருத்துவக் கல்வியிலும், மருத்துவ சேவையிலும் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் ஏராளமான மருத்துவர்களை உருவாக்கி, உலகம் முழுவதும் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

முன்னதாக இந்த பட்டமளிப்பு விழா நான்கு மணியளவில் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெகு நேரமாகியும் விழா தொடங்கப்படாததால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் வெயிலில் உட்கார்ந்தபடியே குடையைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களும் வெயிலில் உட்கார்ந்து இருந்தனர். பின்னர் நிகழ்ச்சி தொடங்குவதற்குக் குத்துவிளக்கு ஏற்றுவதற்கு நீண்ட நேரம் போராடினர்.

திறந்த வெளியில் விழா நடத்தப்பட்டதால் காற்று அடித்ததால் குத்துவிளக்கு ஏற்ற முடியவில்லை. பின்னர் போட்டோவுக்கு சிறப்பு விருந்தினர் போஸ் கொடுத்து விழா தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஊராட்சி அளவில் சாதனை படைத்த 'குழிப்பிறை' - ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.