ETV Bharat / state

சிறுவர்களின் உயிரைக் குடித்த களிமேடு தேர் விபத்து! - தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து

தஞ்சாவூரில் ஏற்பட்ட தேர் விபத்தில் படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது வேதனையளிக்கிறது.

Tanjore chariot fire accident  chariot fire accident  Kalimedu chariot fire  களிமேடு தேர் விபத்து  தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து  தேர் விபத்து
களிமேடு தேர் விபத்து
author img

By

Published : Apr 27, 2022, 6:56 PM IST

தஞ்சாவூர்: களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது.

தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. புதன்கிழமை (ஏப்.27) அதிகாலை 3.15 மணியளவில் கீழத்தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேரை அதன் தேர் நிலை சேரும் இடத்திற்கு செல்வதற்காக தேரை திருப்பிய போது தேரின் அலங்கார தட்டி எதிர்பாராத விதமாக, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் உரசியது.

தேர் ஊர்வலம் முடிந்த பிறகு தேரை அதன் நிலை இடத்திற்கு கொண்டு செல்வதற்காக திருப்பியுள்ளனர். அந்த நேரத்தில் சாலையின் ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது இரும்பினால் செய்யப்பட்டிருந்த தேரின் அலங்காரத் தட்டு உரசியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேரின் மீது நேரடியாக மின்சாரம் பாயந்ததில் அருகில் இருந்தவர்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

களிமேடு தேர் விபத்து

இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ். பரணி (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம் (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பதும், உயிரிழந்தவர்களில் மூன்று பேர் 16 வயது கீழ் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் மின் விபத்து; திமுக மீது எடப்பாடி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.