தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை ஐந்தாயிரத்து 358 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 117 பேருக்கு கரோனா தொற்று பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருபவரின் எண்ணிக்கை 859ஆகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆகவும் அதிகரித்துள்ளது.