ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா: ஆகம விதிமுறைப்படி நடக்க வாய்ப்பு! - ஆகம விதிமுறைப்படி நடக்கும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவானது ஆகம விதிமுறைப்படி நடக்க வாய்ப்புள்ளதாக இந்து அறநிலையத் துறை மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
author img

By

Published : Jan 21, 2020, 4:59 PM IST

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடவுள்ளதால், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் சிறப்பான முறையில் விழாவினை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு தலைமை செயலர் சண்முகம் தலைமையில் 21 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த குழுவில், நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், உள்துறை, சுற்றுலாத் துறை, வருவாய் துறை, போக்குவரத்துத் துறை, அறநிலையத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் 14 முதன்மை செயலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு காவல் துறை தலைவர், தென்னக ரயில்வே மேலாளர், தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அடங்கிய 21 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன. தற்போது இது தொடர்பாக பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளதால் குடமுழுக்கு விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரப்படும் என இந்து அறநிலையத் துறை மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 1980, 1997ஆம் ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா ஆகம விதிப்படியே நடந்துள்ளதாகவும் இம்முறையும் பழைய நடைமுறையே தொடர வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு: உயர்மட்டக்குழு அமைத்த அரசு!

Intro:Body:தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா ஆகம விதிமுறைப்படி நடக்க வாய்ப்பு இருப்பதாக இந்து அறநிலையத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடவுள்ளதால், எந்தவித அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக விழாவினை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் 21 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த குழுவில், நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், உள்துறை, சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் 14 முதன்மை செயலாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.
மேலும், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு காவல்துறை தலைவர், தென்னக ரயில்வே மேலாளர், தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அடங்கிய 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளன. பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளதால் குடமுழுக்கு விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரப்படும் என இந்து அறநிலையத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். 1980, 1997 ஆம் ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா ஆகம விதி படியே நடந்துள்ளதாகவும் இம்முறையும் பழைய நடைமுறையே தொடர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.