உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் உலகப்பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்நிலையில்,கரோனா தொற்றால் அதிக கூட்டம் கூடக்கூடாது என்பதால் நாதஸ்வர,தவில் கலைஞர்கள்,பெரிய கோயில் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தஞ்சை சுற்றுலாத்துறை அலுவலர்கள் என 60 பேர் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பெரிய கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டு நாதஸ்வர இசையுடன் வரவேற்கப்பட்டனர். உலகப் பாரம்பரிய சின்னமாகவும், நாட்டின் தேசிய சின்னமாகவும் திகழும் பெரிய கோயிலை தூய்மையாக பராமரித்து பாதுகாத்திட உறுதி ஏற்றனர்.
இதையும் படிங்க:
'9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?