ETV Bharat / state

காவி உடை அணிந்து வரக்கூடாதா.? வருத்தமடைந்த தமிழிசை செளந்தரராஜன்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் சத்குரு தியாகராஜர் ஆராதனை விழாவினை தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

காவி உடை அணியக்கூடாது என கூறுவது வருத்தத்திற்குரியது - ஆளுநர் தமிழிசை

author img

By

Published : Jan 7, 2023, 8:17 AM IST

Updated : Jan 7, 2023, 1:17 PM IST

தமிழிசை செளந்தரராஜன்

தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847ஆம் ஆண்டில் முக்தி அடைந்தவர். இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் அமைந்துள்ள அவரது சமாதி அருகே தியாக பிரும்ம மகோத்சவ சபையால் ஆராதனை விழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு 176ஆவது ஆராதனை விழா சிறப்பாக தொடங்கியது. இந்த ஆராதனை விழாவில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த கர்நாடக இசைப்பிரியர்கள் மற்றும் பிரபல கர்நாடக வித்வான்கள் கலந்துகொண்டு இசைக் கச்சேரியை நடத்திவருகின்றனர். இந்த ஆராதனை விழா ஜனவரி 11ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

ஆராதனை தொடக்க விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காசி விசாலாட்சியும் இருக்கிறார்கள், இதுதான் நமது நாட்டின் பெருமை.

அதனால்தான் பிரதமர் மோடி காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தினார். காசிக்கும் தமிழுக்கும் நிச்சயமாக உறவு இருக்கிறது. வடக்கும் தெற்கும் இணைந்து பணியாற்றினால் தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும் என்று அன்றே சொல்லி வைத்திருக்கிறார்கள். மற்ற மொழிகளையும் நாம் மதிக்க வேண்டும். சில இடங்களில் காவி உடையில் வருபவர்களை வராதீர்கள் என்று கூறுகின்றனர். இது வருத்ததிற்குரியது அந்தந்த நிறத்தை உடையவர்களை அந்தந்த நிறத்திலேயே இருக்க விட்டுவிட வேண்டும்.

ஏனென்றால், இன்னொரு மொழியை கற்கும் போதுதான் தமிழ் மொழியால் அந்த மொழியில் உள்ள நல்லவற்றை வடமொழிக்காரர்களுக்கும் சொல்ல முடியும். தாய்மொழி தமிழையும் கற்றுக் கொள்ளுங்கள், இன்னொரு மொழியும் கற்றுக் கொள்ளுங்கள் தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. எந்த மதமாக இருந்தாலும், எந்த ஜாதியாக இருந்தாலும் எல்லோரும் சமமாக வாழ்வோம். நல்லதொரு வாழ்க்கையை சமூகமாக வாழ வேண்டும். அதுதான் சமூக நீதி என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'காணவில்லை' என்ற காவி நிற போஸ்டரால் கும்பகோணத்தில் பரபரப்பு!

Last Updated : Jan 7, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.