கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் 2019- 20ஆம் கல்வியாண்டின் இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக் கல்வித் தேர்வுகளும், மே 2ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொலைநிலைக்கல்வி, இளங்கல்வியியல் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் தொடர்பாகப் புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பகுதிகள் - அண்ணா பல்கலைக்கழகம் வரையறை!