ETV Bharat / state

தேங்கும் கழிவு நீர்: பாதிப்பில் மக்கள் - peravurani

தஞ்சாவூர்: பேராவூரணியில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் காய்ச்சல் வந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.

peravurani
peravurani
author img

By

Published : Jul 18, 2021, 6:17 AM IST

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடுத்தர மக்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்துவரும் நிலையில் கடந்த பல மாதங்களாக நகரின் மையப் பகுதிகளில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. ஒரு பக்கம் இப்பகுதியில் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் மறுபுறம் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் இந்த கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கழிவுநீரை அப்பறப்படுத்த பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. அதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் இருக்கும் மரங்களை வெட்டி சாய்த்து அப்புறப்படுத்தி வரும் செயல்களில் அலுவலர்கள் ஈடுபடுவது மக்களை வேதனையடைய செய்கிறது.

மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதோடு;சாலையின் இருபுறமும் குழி தோண்டப்பட்டு அது மூடப்படாமல் இருப்பதால் வணிக வளாகங்களுக்கு வரும் முதியோர் மற்றும் பெண்கள் கீழே விழுந்து காயமடையும் நிலை உருவாகியுள்ளது.

மொத்தத்தில் பேராவூரணி நகர் தற்போது அலங்கோலமாக காட்சியளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து நகரில் சுகாதாரத்தை வலுப்படுத்த தேங்கிக்கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு நகரை சீரமைக்கவும் வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.