திருவையாறு அருகே கீழப்புனவாசலில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கொள்முதல் பணியாளர்களைக் கொண்டு, அறுவடைசெய்த நெல்லை கொள்முதல் செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களாக நேரடி கொள்முதல் நிலையத்தில், நெல்லை கொள்முதல் செய்யாமல் நிறுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. மேலும் கொள்முதல் நிலையத்தில் புனவாசல், கீழப்புனவாசல், பெரும்புலியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 விவசாயிகள் தாங்கள் அறுவடைசெய்த நெல்லைக் கொண்டுவந்து காவல் காத்துவருகிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் பணியாளரிடம் முற்றுகையிட்டனர். உடனே கொள்முதல் பணியாளர் உயர் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து, நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடுசெய்வதாகக் கூறினார்கள்.
மேலும், விவசாயிகள் தொடர்ந்து நெல்மூட்டைகளைக் காவல் காத்துவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நெல் வெயிலிலும் பனியிலும் காய்ந்து தரம் குறைந்துவிடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
உடனடியாக விவசாயிகள் கொண்டுவந்து கொட்டிவைத்துள்ள நெல்லை கொள்முதல்செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
இதையும் படிங்க: ’ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ - ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் பரப்புரை