ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பு: மௌன அஞ்சலி பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுப்பு - christians

தஞ்சாவூர்: இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பட்டுக்கோட்டையில் இன்று நடைபெறவிருந்த மௌன அஞ்சலி பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

மௌன அஞ்சலி பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுப்பு
author img

By

Published : Apr 29, 2019, 11:16 PM IST

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம் கிறிஸ்தவ சபைகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இன்று மாலை மாதா கோயில் தெருவில் மௌன அஞ்சலிப் பேரணி நடக்கவிருந்தது.

இந்நிலையில், இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் திடீரென மறுப்பு தெரிவித்தனர். பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Intro:இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெறவிருந்த மௌன அஞ்சலி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு

Body:இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்களில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர் இந்த சம்பவத்தை ஒட்டி அதில் உயிர் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய அஞ்சலி செலுத்தும் விதமாக பட்டுக்கோட்டை வட்டார கிறிஸ்தவ சபைகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இன்று மாலை மௌன அஞ்சலி பேரணி பட்டுக்கோட்டை மாதா கோயில் தெருவில் இருந்து துவங்க இருந்தது இந்நிலையில் திடீரென மௌன அஞ்சலி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர் அவர்கள் பலமுறை வேண்டியும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை இதைத்தொடர்ந்து மாதா கோயில் வளாகத்திலேயே மௌன அஞ்சலியும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவ சபைகள் அமைப்பினரும் கலைந்து சென்றனர் போலீசார் மௌன அஞ்சலி பேரணிக்கு அனுமதி கொடுக்காத அதைத்தொடர்ந்து இப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.