தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசி (Vaikuntha Ekadashi) சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி, தஞ்சாவூரில் ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் (Sri Veera Narasimha Perumal Temple) மோகினி அவதாரத்தில் இன்று (ஜன.1) எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் நடந்த சுவாமி உலாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு, 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமான தஞ்சையாழி நகர் என்று சொல்லக்கூடிய வெண்ணாற்றங்கரை நகரில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு முந்தைய நாள் நடைபெறக்கூடிய பெருமாள் மோகினி அவதார உற்சவமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மங்கள வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் பிரகார உலா வந்து பக்தர்களுக்குப் பெருமாள் அருள் பாலித்தார். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: New Year 2023: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்