தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காச்சல் காரணமாக 26 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது அவர்களில் முன்று பேருக்கு டெங்கு காச்சல் உறுதி செய்யப்பாடு தனி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மூவரில் விக்னேஷ்குமார் (25) என்பவர் கும்பகோணம் 35வது வட்டம், இராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர். இவர் சென்னை ஆயிரம் விலக்கு பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி அவருக்கு லேசான காச்சல் வந்துள்ளது. அந்த காச்சலுடன் அவர் திருப்பதிக்கு சென்று மீண்டும் செப்டம்பர் 9ம் தேதி சென்னை திரும்பி உள்ள நிலையில், அவருக்கு காச்சல் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று சோதனையிட்டத்தில் விக்னேஷ்குமாருக்கு டெங்கு காச்சல் உறுதி ஆனது. பின்னர் சென்னையில் இருந்து அருவருடைய சொந்த ஊரான கும்பகோணத்திற்கு வந்தையடுத்து 12ம் தேதி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: நாட்டு நலப்பணி திட்ட தினத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்கம் - எர்ணாவூர் நாராயணன் தகவல்!
டெங்குவால் விக்னேஷ்குமார் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய வீட்டில் உள்ள குடும்பத்தினரை சோதனையிட்டதில் அவர்களுக்கு காச்சல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இன்றி நலமாக உள்ளனர். இதனைத்தொடர்ந்து இராமசந்திரபுரத்தை சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பில் அமைந்துள்ள 250க்கும் மேற்பட்ட வீடுகளில் மாநகராட்சி நல அலுவலர் பிரேமா தலைமையில், டெங்கு கொசு ஒழிப்பு முகாம் அமைத்து, வீதிகள் தோறும் கிருமிநாசினி மாவுகள், கொசு மருந்து அடித்தும் கொசு ஒழிக்கும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டனர்.
மேலும், இராமசந்திரபுரத்தில் உள்ள 250 வீடுகளுக்கும் தனித்தனியாக சென்று அவர்களை சோதனையிட்டு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினர். இந்நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னேஷ்குமார் உட்பட, கும்பகோணம் அருகில் உள்ள முல்லை நகர் மற்றும் கொரநாட்டு பகுதியை சேர்ந்த இருவரும் டெங்கு தனி வார்டில் சிக்ச்சை பெற்று, தற்போது மூவரும் நலமாக உள்ளனர்.
இது குறித்து மருத்துவர் நல அலுவலர் பிரேமா கூறுகையில்; “கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காச்சல் காரணமாக 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இது காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு முகாம் அமைக்கப்பட்டு, டெங்கு கொசு ஒழிக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று சோதனையிட்டு தேவையான மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்
இதையும் படிங்க: "சேமிப்போம்.. சேமிப்போம்... மழை நீரை சேமிப்போம்" - பள்ளி மாணவகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்!