ETV Bharat / state

சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயில் மஹாநந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Shani Pradosam at thanjai big temple
சனி பிரதோஷம்
author img

By

Published : Jul 2, 2023, 8:13 AM IST

சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மஹாநந்திக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் கோயிலாகும். இக்கோயில் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கோயிலாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தும், பெரிய கோயிலின் கட்டடக் கலையை பார்த்து வியந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் தனி மண்டபத்தில் வீற்றிருக்கும் மஹாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். அதேபோல் ஜூலை 1ஆம் தேதி ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது.

மேலும் பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மஹாநந்தியம் பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதே போன்று பெருவுடையாருக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பிரதோஷ அபிஷேகம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும், கல்வி வளம் பெருகும், செல்வம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிலையில் சனிப்பிரதோஷம் என்பதால், பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரிய கோயிலில் மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு மற்றும் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி அலங்காரம், மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா, பெருவுடையார் - பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம், மஹாநந்தியம் பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா நடைபெறுகிறது.

மேலும், பெருவுடையாருக்கு ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் மற்றும் சித்திரைத் தேர் திருவிழா, தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா, அதைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பேரபிஷேகம் மற்றும் நான்கு கால அபிஷேகம், பூஜையாக நடைபெறும் மஹா சிவராத்திரி விழா நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து விடிய விடிய நடைபெறும் நாட்டியாஞ்சலி, நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சன அபிஷேகம் ஆகியவை விழாக் காலங்களில் கோயிலில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த விழாவாகும். இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கும்பேஸ்வரன் கோயிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.