ETV Bharat / state

மஜக மாநில நிர்வாகி கொலை வழக்கு - 6 பேர் சரண் - Manithaneya Jananayaga Katchi

திருப்பத்துார்: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

6 பேர்
6 பேர்
author img

By

Published : Sep 15, 2021, 12:15 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் வாசிம் அக்ரம் (40). இவர், பல சமூக சேவைககள் ஆற்றிவந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராகவும் இருந்தார்.

கடந்த 10ஆம் தேதி இரவு இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் அகஸ்டின், பிரவின் குமார், சத்தியசீலன் முனீஸ்வரன், அஜய் உள்ளிட்ட 6 பேர் வாசிம் அக்ரமை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு தஞ்சாவூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு சரணடைந்தனர். இவர்களிடம் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.