ETV Bharat / state

அரியலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போருக்கு மேயர், அதிகாரிகள் ஆறுதல்!

Ariyalur fire accident: அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயம் அடைந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை நபர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் படுகாயம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 8:31 PM IST

தஞ்சை மருத்துவமனை

அரியலூர்: விரகாலூர் கிராமம் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் முறையாக பின்பற்றாததாலும், எதிர்பாராத விதத்தில் வெடி விபத்துகள் ஏற்பட்டு அசம்பாவிதமும், உயிரிழப்புகளும் சில நாட்களாக நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், கீழப்பலூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சியில் உள்ள விரகாலூர் கிராமத்தில், இயங்கி வரும் பட்டாசு தயாரிக்கும், தொழிற்சாலை மற்றும் விற்பனை நிலையத்தில், சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த 11 கூலி தொழிலாளர்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் உள்ளுரை சேர்ந்த தொழிலாளர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், இன்று (செப்.09) வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் வெடி தயாரிப்பதற்காக வைத்திருந்த, ஏராளமான வெடி மருந்து பொருட்களும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் என அடுத்தடுத்து வெடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் வெடி மருந்து பொருட்கள் வைத்திருந்த குடோனும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொட்ர்ந்து, சம்பவ இடத்தில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட கார்த்திக் (22), முருகானந்தம் (20), சுந்தர் (21), கருப்பையன் (33), பாஸ்டின் (42), சந்துரு (21), அனீத்குமார் (27) ஆகிய 7 பேர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வரும் படுகாயம் அடைந்தவர்களை மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் நேரில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க: பள்ளி வேன்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.