ETV Bharat / state

சேங்கனூர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் தேர் திருவிழா

சேங்கனூர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் பிரமோற்சவத்தின் 9ஆம் நாளான இன்று தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில்
ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில்
author img

By

Published : Jan 27, 2023, 1:14 PM IST

சேங்கனூர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் தேர் திருவிழா

கும்பகோணம்: சோழபுரத்திற்கும், திருப்பனந்தாளுக்கும் இடையே அமைந்த கிராமம் சேங்கனூர். வைஷ்ணவ ஆச்சார்ய சக்ரவர்த்தி என போற்றப்படும் பெரியவாச்சான்பிள்ளை அவதார ஸ்தலமாகவும், முக்தி பெற்ற தலமாக விளங்குகிறது. அவரது வம்சாவழியான கிருஷ்ணபிரேமியும் இங்கு தான் அவதரித்தார் என்பத நம்பிக்கை.

இத்தலத்தில் பழமையான சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு திருப்பதி பெருமாளை நேரில் காண்பது போலவே அச்சு அசலாக அமையப்பெற்ற சுயம்புவாக தோன்றிய சீனிவாசப்பெருமாள் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வேறு எந்த வைணவ ஸ்தலத்திலும் காண முடியாதபடி, அபய ஹஸ்தத்துடன் இங்கு அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் சக்கரத்தாழ்வார், விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். திருப்பதி செல்ல இயலாதோர் இத்தலப்பெருமாளை புரட்டாசி மாதத்தில் சேவிப்பது திருப்பதி சென்று வந்த பலனை தரும். அதிலும் புரட்டாசி மாத்தில் வரும் சனிக்கிழமைகள் மேலும் விசேஷமானவை என கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற வைணவ தலத்தில், ஆண்டு தோறும் தை மாதத்தில், பிரமோற்சவ விழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோலவே இவ்வாண்டும், இப்பிரமோற்சவம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும், சந்திரபிரவை, ஹம்ச, கருட, ஹனுமந்த, இந்திர விமானம், யானை, குதிரை, சூர்யபிரபை என பல்வேறு வாகனங்களில் சக்ரபாணிசுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின், 9ஆம் நாளான இன்று, உற்சவர் பத்மாவதி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் புதிய பட்டு வஸ்திரங்கள், பல வண்ண அழகிய மலர் மாலைகளுடன் தேரில் எழுந்தருள, அங்கு சிறப்பு பூஜைகள் செய்விக்கப்பட்டது. பிறகு, இருபுறமும் இரு பட்டாட்சாரியார்கள் வெண்சாமரம் வீச, தேரோட்டத்திற்கு முன்னதாக யானை, ஒட்டகம், நாட்டிய குதிரை அணிவகுத்து சென்றது.

அதனையடுத்து நாதஸ்வர மேள தாளம் முழங்க, பஜனை கோஷ்டியினரும், வேத விர்பன்னர்கள் பாசுரங்கள் பாடி, வேத பாராயணம் செய்ய, தொடர்ந்து ஏராளமான பெண்கள் திரண்டு, கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பி கோலாட்டம் ஆடியப்படி வந்தனர். வீதியெங்கும், பொதுமக்கள் பலரும் அர்ச்சனைகள் செய்து தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: வீடியோ: தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.