நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மறைந்த கட்சி தொண்டர்களின் உருவ படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியா என்று கேட்டதற்கு, சோமாலியா, எத்தியோபியா, வெனிசுலா போன்று என் நாடு ஆகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
மீத்தேன் போன்று நம் நிலத்தை வீணாக்கும் திட்டங்களின் மீது அதிமுக, திமுக ஆட்சி கையெழுத்திட்டு என் மண்ணையே சீர்குலைத்து விட்டார்கள். அதனால் பாஜக, திராவிடக் கட்சிகளோடு கூட்டணியில்லை, இது எங்கள் கட்சி கொள்கை முடிவு. நாங்கள் எப்போதும் தன்னிச்சையாகவே தேர்தல் களத்தில் விளையாடுவோம், காங்கிரஸ் நம் இனத்தின் எதிரி, பாஜக மனித குலத்தின் எதிரி, எந்தக் காலத்திலும் இரண்டு கட்சியுடன் உடன்பாடு வைத்துகொள்ள மாட்டோம்.
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 117 ஆண்கள், 117 பெண்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை ஜனவரி மாதத்தில் அறிவிப்போம். எங்களுக்கு ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் போன்ற கட்சிகள் ஆதரவு இருக்கிறது. திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியா என்ற நாடும் இல்லை, இந்து என்ற மதமும் இல்லை, நான் மீசை வைத்து பூணூல் போட்டால் என்னை பிராமணர் என்று ஒத்துக் கொள்வார்களா? எங்கள் காலம் வரும்பொழுது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது என கூறினார்.
இதையும் படிங்க:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சைப் பிரிவுகள் தொடக்கம்!