தஞ்சாவூர்: கோடை கால பழங்களில் ஒன்றான மாம்பழம், பழங்களில் ராஜாவாக போற்றப்படுகிறது. இதன் பூர்வீகம் மியான்மர், வடகிழக்கு இந்தியா, இந்தோனேசியா ஆகும். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாம்பழங்கள் இந்தியாவில் விளைவிக்கப்பட்டன.
உலக அளவில் அதிகம் இந்தியாவில் 20 மில்லியன் டன் மாம்பழங்கள் ஆண்டு தோறும் பயிரிடப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. மாமரங்கள் வகைக்கு ஏற்ப நூறு அடி உயரம் வரை வளரக்கூடியவை. மாம்பழங்களில் 20 தனித்துவமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளது. பங்களாதேஷின் தேசிய மரமாக விளங்கிறது இந்த மாம்மரம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ம் நாள், தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை போற்றிடும் வகையில், கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில் தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க: நாமக்கல்லில் கோலாகலமாக நடந்த 'தேங்காய் சுடும்' பண்டிகை!.. பண்டிகையின் சிறப்பு என்ன?
நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் கழுத்தில் மாம்பழ ஓவியங்களையும் புகைப்படங்களை மாட்டியும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
மேலும், மாம்பழத்தை பெருமைப்படுத்திடும் வகையில் பிரத்யோக பாடல்களை பாடியும் அதற்கேற்ப ஆடியும் மகிழ்ந்ததுடன், பார்வையாளர் வரிசையில் இருந்த சக மாணவ மாணவியர்களையும் ஆசிரிய பெருமக்களையும் கவர்ந்து ரசிக்க வைத்ததுடன், செந்தூரா, ருமானி, ஒட்டு, மல்கோவா, நீலம், பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, பாதிரி, பச்சையரிசி, நாட்டு உருண்டை, காலாப்பாடி, சிந்து, கேசரி உள்ளிட்ட வகை வகையிலான மாம்பழங்களை மிகப்பெரிய மாம்பழம் போல தோற்றும் அளிக்கும் வகையில், வரிசையாக அழகாக அடுக்கி வைத்தும் காட்சிப்படுத்தி அசத்தியிருந்தனர்.
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் குடு குடு கிழவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றான மாம்பழம், தாகத்தை தணிப்பதிலும், ஊட்டச்சத்து மிக்க ஒன்றானதாகவும் விளங்குகிறது என்றால் அதனை எப்போதும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது என்பது உண்மை. "மாத ஊட்டாத அண்ணத்தை மா ஊட்டும்" என்னும் வழக்கு மொழிக்கேற்ப இந்த நிகழ்வு மிகவும் இனிமையாக நடைபெற்றது.
இதையும் படிங்க: ஆங்கில டீச்சர் இல்லாத அரசுப் பள்ளி.. பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!