ETV Bharat / state

பாய்மர படகுப்போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற தொண்டி மீனவர்கள் - நாட்டிகல் மைல்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே 2200 பேர் பங்கேற்ற பாய்மர படகுப்போட்டியில் தொண்டி மீனவர்கள் முதலிடம் பிடித்தனர்.

Sailboat Riding
Sailboat Riding
author img

By

Published : Jan 25, 2020, 1:50 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் பகுதி பாரதத்தாய் இளைஞர் நற்பணி மன்றம், 28 ஆண்டுகளாக பாய்மர படகுப் போட்டி நடத்தி வருகிறது. இந்நிலையில் 29ஆவது ஆண்டு படகுப்போட்டியை சேதுபாவாசத்திரம் படகுகள் இறங்குதளத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 22 படகுகளில் 10 பேர் வீதம் இன்ஜின் பொருத்தப்படாத பாய் மரத்தின் மூலம் செல்லும் வகையிலான பாய்மர படகுகளே பங்கேற்றன.

கடற்கரையிலிருந்து இரண்டு பாகத் தொலைவுக்குச் (இரண்டு நாட்டிகல் மைல்) சென்று மீண்டும் கரை திரும்பும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது. மொத்தம் நான்கு பாகஅளவு தூரம் கொண்ட இந்த போட்டியில் மீனவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தினம்தோறும் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே மீன் பிடித்து வரும் நிலையில் இப்போட்டி மனநிறைவை ஏற்படுத்துவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

முதல் பரிசை தட்டி சென்ற தொண்டி மீனவர்கள்

மேலும் இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25000 ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்

Intro:பாய்மரப் படகு போட்டி= வீரம் காட்டிய தஞ்சை மீனவர்கள்

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சேதுபாவாசத்திரம். இங்குள்ள பாரதத்தாய் இளைஞர் நற்பணி மன்றம் 28 ஆண்டுகளாக பாய்மரப் படகு போட்டி நடத்தி வருவது வழக்கம். இந்நிலையில் 29 ஆவது ஆண்டு படகுப்போட்டி சேதுபாவாசத்திரம் படகுகள் இறங்குதளத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 22 படகுகளில் ஒவ்வொரு படகிலும் சுமார் 10 பேர் வீதம் இன்ஜின் பொருத்தப்படாத பாய் மரத்தின் மூலம் காற்றின் வேகத்தில் செல்லும் வகையில் உள்ள இந்த பாய்மர படகுப் போட்டியில் கடற்கரையிலிருந்து இரண்டு பாகத் தொலைவுக்குச் சென்று மீண்டும் கரை திரும்பும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது. மொத்தம் நான்கு பாக அளவு தூரம் கொண்ட இந்த போட்டியில் மீனவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தினந்தோறும் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே கடலில் சென்று மீன் பிடித்து வரும் வாழும் மீனவர்களுக்கு இந்தப் போட்டி மனநிறைவை ஏற்படுத்துவதோடு ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் மீனவ மக்கள். இந்தப்போட்டியில் முதல் பரிசு வென்ற ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீனவர்களுக்கு ரூபாய் 25000 பரிசு வழங்கி கோப்பையும் அளிக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.