ETV Bharat / state

அவசரகதியில் சீரமைப்புப் பணிகள்; விவசாயிகள் அச்சம்! - Renovation work

தஞ்சாவூர்: கடந்த ஆண்டு கல்லணை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை தற்போது அலுவலர்கள் அவசரகதியில் சீரமைத்துவருவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்
author img

By

Published : Aug 13, 2019, 6:30 AM IST

கடந்த ஆண்டு கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோது தஞ்சாவூர் அருகே உள்ள கல்வி ராயப்பேட்டை கிராமத்தின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. கல்லணை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.

அவசரகதியில் சீரமைப்பு பணிகள்; விவசாயிகள் அச்சம்!

கடந்த ஆண்டு சேதமடைந்த கால்வாயே இதுவரை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூரில் தண்ணீர் திறக்க இருப்பதால், அவசரகதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓராண்டு காலமாக பணி செய்யாமல், தண்ணீர் வரும் வேளையில் அவசரகதியில் செய்யப்படும் வேலைகள் முழுமையாக இருக்காது, மீண்டும் உடைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Intro:தஞ்சாவூர் ஆக 12Body:
கடந்த ஆண்டு கல்லணை கால்வாயில் கரை உடைப்பை தற்போது அவசர கதியில் சீரமைப்பு
கடந்த ஆண்டு கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போது தஞ்சாவூர் அருகே உள்ள கல்வி ராயப்பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் உடைப்பு ஏற்பட்டது இதன் காரணமாக ஆற்றின் நீர் வயல் செயல்படும் சேதத்தை ஏற்படுத்தியது கல்லணை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை பேராவூரணி ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை இதன் காரணமாக சம்பா சாகுபடி கடுமையாக இப்பகுதியில் பாதிக்கப்பட்டது இந்நிலையில் கடந்த ஆண்டு சேதமடைந்த கரையை இதுவரை சரி செய்யாமல் மேட்டூரில் நாளை தண்ணீர் திறக்க இருக்கும் நிலையில் இன்று அவசரகதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர் ஓராண்டு காலமாக பணி செய்யாமல் தண்ணீர் வரும் வேளையில் அவசரகதியில் செய்யப்படும் வேலைகள் முழுமையாக இருக்காது மீண்டும் உடைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் Conclusion:Thanjavur sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.