தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரது மனைவி ப்ரீத்தி. இவர்கள் இருவருக்கும் கெவின் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு, குழந்தையின் உடல் நிலை சரியில்லாததால், ப்ரீத்தி குழந்தையை தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைக்கு இறுதி சடங்கு செய்யும் வேளையில் குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது.
உடனே உறவினர்கள் குழந்தை இன்னும் இறக்கவில்லை என முடிவு செய்து, மீண்டும் 10 மணியளவில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பணியிலிருந்த மருத்துவர், குழந்தை அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்ததாக தெரிவித்தார்.
இதைக்கேட்ட குழந்தையின் பெற்றோர் காலை உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாகக் கூறி சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதால்தான் தற்போது குழந்தை உயிரிழந்தது எனக் குற்றஞ்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மருத்துவர்களிடம் விசாரிக்கையில் குழந்தை காலை வரும்பொழுதே இறந்துவிட்டதாகவும், உடலில் ஏற்பட்ட அசைவு காரணமாக அவர்கள் குழந்தை உயிருடன் இருப்பதாக நினைத்து அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவர் குழந்தை தற்போது இறந்தது என கூறவில்லை, அரைமணி நேரம் முன்னபாகவே இறந்தது என்றுதான் கூறினார். இதனை பெற்றோர் தவறாக புரிந்துகொண்டு போராட்டம் நடத்துகின்றனர் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரம்; கோரிக்கை விடுத்த கபீல் கான்!