ETV Bharat / state

மாவட்ட அலுவலர்களின் தவறான கணக்கெடுப்பு - மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை - thanjai people want re election

தஞ்சாவூர்: தம்பிக்கோட்டை மறவக்காடு, ஒதியடிக்காடு ஆகிய ஊராட்சியில் மாவட்ட அலுவலர்களின் தவறான கணக்கெடுப்பால் மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை
மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை
author img

By

Published : Jan 6, 2020, 3:00 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை மறவக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெரும்பான்மையான நிலையிலும், பட்டியலின மக்கள் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர்.

ஆனால் மாவட்ட அலுவலர்கள் கணக்கெடுப்பில் பட்டியலினத்தவர் அதிகளவில் உள்ளனர் எனவும், இதேபோல் ஒதியடிக்காடு என்ற ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர் உள்ளனர். ஆனால் பட்டியலினத்தவரே இல்லை எனவும் அலுவலர்கள் தவறான கணக்கெடுப்பை எடுத்துள்ளனர்.

இதனால் 20 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் ஊராட்சி மன்றத் தலைவரை தேர்ந்தெடுத்த மக்கள் இம்முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருந்தனர். இதனையடுத்து பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கோரிக்கை வைத்ததன்பேரில் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மட்டும் வாக்களித்துள்ளனர்.

மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை

இருப்பினும் முறையான கணக்கெடுப்பை நடத்தி ஊராட்சி மன்றத் தலைவரை முன்புபோல் தாங்கள் தேர்ந்தெடுக்க, மீண்டும் தேர்தலை நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொய் பரப்புரையால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வி - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Intro:அதிகாரிகளின் முறைகேடான கணக்கெடுப்பு=
-பொது இட ஒதுக்கீடு செய்து மீண்டும் தேர்தல் நடத்த கிராம மக்கள் கோரிக்கை

Body: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு ஊராட்சி. இங்கு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பெரும்பான்மையான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் ஆயிரத்து 100 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊரின் சிறப்பம்சம் கடந்த 20 வருடங்களாக பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என இரு தரப்பினரும் சுமூக முறையில் சுழற்சி அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இருப்பது என முடிவு செய்து அதன்படி கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு பட்டுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தேர்தல் நடைபெறாமல் இருந்து தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்து முடிந்தும் இந்த ஊருக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை என்ற உணர்வே இப்பகுதி மக்களிடம் இருந்து வருகிறது. மேலும் பதினைந்து வாக்காளர்களை கொண்ட ஆதிதிராவிடர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பாத நிலையில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்து விட்டனர். இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்துவிட்டது. மேலும் இந்த ஊராட்சிக்கு அருகிலுள்ள ஒதியடிக்காடு என்ற ஊராட்சியில் 300க்கு மேற்பட்ட ஆதிதிராவிடர்கள் இருந்து வரும் நிலையில் அந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர்களே இல்லை என்றும் 15 வாக்களர்கள் உள்ள மறவக்காடு ஊராட்சியில் 300க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தவறான, முறைகேடான கணக்கெடுப்பை எடுத்துள்ளனர். மறவக்காடு ஊராட்சியை ஆதிதிராவிடருக்கென ஒதுக்கியது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்கின்றனர் இந்த கிராம மக்கள். மேலும் ஒதியடிக்காடு கிராமத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள் அனைத்தும் அதிகாரிகளின் இந்த தவறான கணக்கெடுப்பால் மறவக்காடு பகுதியில் உள்ள 15 நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதியை தற்போது யாருக்கும் பயன்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த வேளையில் தேர்தலுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் அனைவரும் இந்த ஊராட்சியை பொது இட ஒதுக்கீட்டுக்கு மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் இடத்தில் கோரிக்கை வைத்ததன் பேரில் சார் ஆட்சியர் ஆறு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி துணைத்தலைவர் தேர்ந்தெடுத்து துணைத் தலைவரின் மூலம் ஊராட்சியை நிர்வகிக்க முடியும் என்றும் சார் ஆட்சியர் கூறியதையடுத்து இந்த பகுதி மக்கள் இந்த உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்திருந்த முடிவை மாற்றி ஊராட்சி மன்றத் தேர்தலில் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வாக்களித்தனர். இருந்தும் தங்களது ஊராட்சியில் வேண்டும் பொது இட ஒதுக்கீடு செய்து முன்புபோல அதாவது கடந்த காலம் போல சுமூகமான முறையில் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் ஊராட்சியை நிர்வகிக்க வழிவகை செய்யவேண்டும் என்கின்றனர் இந்த கிராமத்து மக்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.