தஞ்சாவூர் மாவட்டம் திருவோண அருகே உள்ள ராஜாளி விடுதி அங்காடியில் நியாயவிலைக் கடை பொருள்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் மாவட்ட உதவி ஆட்சியர் மஞ்சுளா, திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி, கூட்டுறவுத் துறை அலுவலர் சின்னப்பொண்ணு, வருவாய் ஆய்வாளர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளர் சந்திரசேகர் அங்காடி விற்பனையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், நியாயவிலைக் கடை பொருள்கள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான முறையில் வழங்குவது குறித்த முன்னோட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: திடீரென நியாயவிலைக் கடையில் குவிந்த மக்கள்: அதிர்ச்சியடைந்த அலுவலர்கள்