ETV Bharat / state

ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாட்டம்; நினைவு மண்டபம் அமைக்க அரசுக்கு கோரிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் 1037வது சதய விழா நடைபெற்றது.

ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாட்டம்
ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாட்டம்
author img

By

Published : Nov 4, 2022, 10:44 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே முழையூர் சமத்துவபுரத்தில் உள்ள திருமண அரங்கில், மாமன்னன் இராசராஜசோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் 1037வது சதய விழாநடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு அவரது பணியை பாராட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் மோதிரம் அணிவித்தார். மேலும், சோழன் நாள்காட்டியும், விழா மலரும் வெளியிடப்பட்டது, ராஜராஜ சோழன் தொடர்பான கட்டுரை போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களை பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பங்கேற்ற குடவாயில் பாலசுப்பிரமணியன், “ சோழ நாச்சியார் ராஜசேகர் ஆகியோர் உடையாரில் தான் மாமன்னன் நினைவிடம் உள்ளது என்பதற்கு அவர் இறந்து நூறு ஆண்டுகளுக்கு பின் வைக்கப்பட்ட கல்வெட்டு பால்குளத்தி அம்மன் கோயிலில் உள்ளது, அவர் பிறந்து வாழ்ந்து மறைந்தது இந்த மண் தான் எனவே இங்கு அவருக்கு அரசின் சார்பில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும் என்றும், சென்னை கடற்கரை சாலையில் கன்னியாகுமரி வரையிலான 700 கி.மீ நீள சாலைக்கு, மாமன்னன் இராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும்.

ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாட்டம்

அதுமட்டுமின்றி, இந்திய தலைநகரான டில்லியில் முக்கியமான சாலைக்கு அவரது பெயர் வைப்பதுடன், அவரது திருவுருவ சிலை ஒன்றை அங்கு நிறுவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் போது, “மாமன்னன் ஆட்சி செய்த, கைப்பற்றிய இடங்களில் எல்லாம், அந்த பகுதி மக்களையே ஆட்சி செய்ய வைத்துவிட்டு வரியை மட்டும் பெற்றுக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கினான். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் என்பதில் உறுதிபூண்டு அதற்காக ஆய்வுகள் மேற்கொள்ள முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், “நினைவு மண்டபம் அமைந்தால் அது ஒருநாள் விழாவிற்கு மட்டுமே பயன்படும் என்பதால், அத்தகைய இடங்களில் நினைவு அரங்கங்களை அரசு கட்ட முடிவு செய்துள்ளது.

ராஜராஜசோழனின் நினைவிடம் குறித்து ஆய்வினை, தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதால், இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு வாயிலாக மேற்கொள்ள முதலமைச்சரை நானும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் அன்பில் மகேஷும் சேர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள், பொது மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பொது மக்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் தமிழ்ப்பற்றுள்ள ஜப்பானியர்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.